செய்திகள்
தா.பழூர் அருகே நிலத்தகராறில் கணவன், மனைவிக்கு அடி-உதை
தா.பழூர் அருகே நிலத்தகராறில் கணவன், மனைவியை கட்டையால் தாக்கிய தாய், மகன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பூவந்திக்கொல்லை பகுதி யைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (வயது 57) இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில் முத்து ராமலிங்கத்திற்கும், முத்துச் செல்வன் மனைவி சாந்திக்கிடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாந்தி மற்றும் அவரது மகன் ராஜேஷ் இருவரும் முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரை கட்டையால் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து முத்துராமலிங்கம் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.