செய்திகள்

விராலிமலை அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் பல்கலைக்கழக பேராசிரியர் பலி

Published On 2017-01-26 19:58 IST   |   Update On 2017-01-26 19:58:00 IST
விராலிமலை அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் பல்கலைக்கழக பேராசிரியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விராலிமலை:

மதுரை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வீரசேகரன் (வயது 48). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சொந்த வேலையின் காரணமாக காரில் மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். காரை சந்தானம் (23) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த கார் விராலிமலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக திருச்சியிலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் சென்றது. நிலை தடுமாறிய அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வீரசேகரன் வந்த காரின் மீது பலமாக மோதியது.

இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. வீரசேகரன் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த சந்தானம் படுகாயம் அடைந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தானத்தை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவம் குறித்து அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்திற்கு சென்று வீரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News