செய்திகள்

பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்து இளம்பெண் பலி

Published On 2017-01-23 16:09 IST   |   Update On 2017-01-23 16:09:00 IST
பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்து இளம்பெண் ஒருவர் இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே உள்ள நெற்குப்பையைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி பாண்டிச்செல்வி(வயது24).இவர் தங்களது மாடுகள் பிடித்து வரும் போது தடுமாறி அவர்களது விவசாயக்கினற்றில் விழுந்துள்ளார். இவரைக்காப்பாற்ற கணவர் மாணிக்கம் (29) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த பாண்டி(35),ரவிக்குமார்(35) ஆகியோர் கினற்றில் குதித்துள்ளனர். ஆனால் 4பேரும் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்துக்கொடிருந்துள்ளனர்.

உடனே பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து பொறுப்பு நிலைய அலுவலர் மெய்யநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று 60அடி ஆழமுள்ள கிணற்றில் 10அடி தண்ணீரில் கயிறு கட்டி இறங்கி 4 பேரையும் மீட்டுள்ளனர்.

இதில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மற்ற மூவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெற்குப்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News