செய்திகள்

மாவட்ட அளவில் புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை: கலெக்டர் பாராட்டு

Published On 2017-01-06 22:30 IST   |   Update On 2017-01-06 22:30:00 IST
அரசு வாரிய தேர்வில் மூன்று துறைகளில் மாவட் டத்தில் முதலிடம் பெற்ற செந்தூரான் பல் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு வாரிய தேர்வில் மூன்று துறைகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற செந்தூரான் பல் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், லேணாவிலக்கில் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இக்கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் பயிலும் மாணவன் சிவசுப்பிரமணியன் அக்டோபர் 2016ல் நடந்த அரசு வாரியத் தேர்வில் 700-க்கு 678 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். 

இதேபோல் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவன் ஆ.சீனிவாசன் 700-க்கு 677 மதிப்பெண்களும்,  இரண்டாமாண்டு துறை மாணவன் சிவகுமார் 700-க்கு 677 மதிப்பெண்களும் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.   
மேலும் முதலாமாண்டு பயிலும் மாணவன்சூர்யா 800க்கு 780 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.  இதே போன்று மூன்றாமாண்டு அமைப்பியல் துறை மாணவன் அழகேசன் 700-க்கு 675 மதிப்பெண்கள் பெற்று கல்லூரிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 62 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100மதிப்பெண் பெற்றுள்ளனர். 

இவ்வாறு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன் தொடர்ந்து சிறப்பாக கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

நிகழ்ச்சியில் செந்தூரான் கல்விக்குழும தலைவர் வயிரவன், துணைத்தலைவர்  நடராஐன், முதன்மை செயல் அலுவலர்கார்த்திக், கல்லூரி முதல்வர் செல்வராஜ், ஆட்டோமொபைல் துறைத் தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News