செய்திகள்
மாமல்லபுரம் கடலில் அரியவகை பலாசி மீன்கள்
மாமல்லபுரம் கடலில் வார்தா புயலுக்குப்பின் பலாசிமீன் என்று சொல்லக்கூடிய பலூன் பிஷ் அரியவகை மீன்கள் அதிக அளவில் வலைகளில் சிக்குகிறது.
மாமல்லபுரம்:

இந்த மீன் கடலுக்குள் இருக்கும் போது சாதாரண மீன்கள் போன்று தெரியும். மீனவர்களின் வலைகள் பட்டதும் அதன் உடல் முழுவதும் உள்ள முட்கள் வலைகளை கிழித்து சேதப்படுத்தும்.
இந்த வகை மீன்களின் முட்கள் சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் மருந்துக்கு பயன்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பலாசி மீன்கள் விலை போவதில்லை. இதனை உணவுக்கும் பயன்படுத்த முடியாது.
எனவே பிடிபடும் பலாசி மீன்களை மீனவர்கள் கடலோரத்தில் வீசி விடுவார்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் மாமல்லபுரம் கடலோரத்தை சுற்றி பார்க்கும் சுற்றுலா பயணிகளின் கால்களையும் குத்தி கிழித்து காயப்படுத்துகிறது.
மீன் முள்களில் விஷத் தன்மை இருப்பதால் பேரூராட்சி நிர்வாகம் கடலோர பகுதிகளை தினசரி ஆய்வு செய்து மீன்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.