செய்திகள்
திருமயம் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
திருமயம் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
கீரனூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் காரில் திருமயம் அருகே உள்ள அழகாபுரியில் பயிற்சிக்காகசென்று விட்டு கீரனூர் திரும்பி கொண்டிருந்தனர். கப்பத்தான்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் வேன் காரில் பின்னால் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருமயம காவல்துறையினர் சம்பவ இட்த்திற்க்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் புதுக்கோட்டை மதுரை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.