செய்திகள்

தாம்பரம் பகுதியில் ஆவணம் இல்லாத 12 லாரிகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2017-01-05 13:42 IST   |   Update On 2017-01-05 13:42:00 IST
தாம்பரம் பகுதியில் விடிய விடிய நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 12 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவின் பேரில் தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார்கள் குமுதா, இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு புறநகர் பகுதிகளில் லாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர் மற்றும் சேலையூர் பகுதிகளில் விடிய விடிய நடந்த சோதனையில் கருங்கல், மணல் ஏற்றி வந்த 12 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News