செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.39.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கணேஷ் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கணேஷ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது:-
பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல் கோரி 9 மனுக்களும், விலையில்லா வீட்டு மனை பட்டா வேண்டி 17 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 12 மனுக்களும், காவல்துறை நடவடிக்கைக்காக 9 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 12 மனுக்களும், பசுமை வீடு, சாலை வசதி, குடிநீர்வசதி கோரி 46 மனுக்களும், கல்வி உதவித்தொகை கோரி 1 மனுவும், முதியோர் உதவித்தொகை கோரி 11 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 11 மனுக்களும், இதர கோரிக்கைக்காக 106 மனுக்களும் என மொத்தம் 234 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், குளத்தூர் வட்டத்தை சேர்ந்த 44 பயனாளிகளுக்கு தலா ரூ.90347 என மொத்தம் ரூ.3975268 மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களுக்கான ஆணைகளும் என பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
இவ்வாறு கலெக்டர கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்அ.ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.