செய்திகள்

அரிமளம் அருகே மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது

Published On 2017-01-03 17:18 IST   |   Update On 2017-01-03 17:18:00 IST
அரிமளம் அருகே மின் மோட்டாரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து நீர் மூழ்கி மோட்டாரை பறிதல் செய்தனர்.
அரிமளம்:

புதுக்கோட்டை அருகேயுள்ள சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்(வயது29). இவர் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பைப்லயன்(குழாய்) பதிக்கும் ஒப்பந்தகாரராக பணியாற்றி வருகிறார். அரிமளம் அருகேயுள்ள நெய்வாசல்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் தேக்க தொட்டியில் நீர் முழ்கி மோட்டாரை பொறுத்தி உள்ளார்.

இந்நிலையில் நீர் தேக்க தொட்டியில் அமைக்கப்பட்டிருந்த நீர் முழ்கி மோட்டாரை காணவில்லை. இது குறித்து அரிமளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அரிமளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில் அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் பழனிச்சாமி(வயது 29) பெருங்குடி அருகேயுள்ள பாப்பான்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் சரவணன்(வயது 24) ஆகியோர் நீர் முழ்கி மோட்டாரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த நீர் முழ்கி மோட்டாரை பறிமுதல் செய்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News