செய்திகள்
வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது
வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பின்புறம் அரசு அனுமதியில்லாமல் மது விற்றுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42) என்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.