செய்திகள்

கோபி அருகே திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்

Published On 2016-10-19 16:11 IST   |   Update On 2016-10-19 16:11:00 IST
கோபி அருகே திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் அளித்துள்ளார்.

கோபி:

கோபி அருகே உள்ள பா. நஞ்ச கவுண்டன் பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி சங்கீதா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது.

சம்பவத்தன்று செந்தில்குமார் வேலைக்கு சென்று விட்டார். அவரது பெற்றோரும் வெளியூர் சென்று விட்டனர். இதனால் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதன்பிறகு அவரை திடீர் என்று காணவில்லை. வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி செந்தில் குமார் வீட்டில் தனது மனைவி இல்லாததை கண்டு திடுக்கிட்டார்.

இதனால் அவரை அக்கம் பக்கத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடினர். எங்கு தேடியும் அவரைபற்றி எந்த தகவலும் கிடைக் கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பதும் தெரிய வில்லை.

எனவே இது பற்றி செந்தில் குமார் கோபி போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து காணமால் போன சங்கீதாவை தேடி வருகிறார்கள்.

Similar News