செய்திகள்
வேதாரண்யம் அருகே குடிசை வீடு எரிந்து சேதம்
வேதாரண்யம் அருகே குடிசை வீடு எரிந்து சாம்பல் ஆனது. சேத மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சந்திரா.இவர் செங்கற் சுவர் எழுப்பிய கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த சந்திரா தண்ணீர் எடுக்க வெளியில் சென்ற போது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவத் தொடங்கியது.
இதில் வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. சேத மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சந்திராவிற்கு அரசு உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.