செய்திகள்
சென்னிமலையில் மாநில அளவிலான கபடி போட்டி
மாநில அளவில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அணி கலந்து கொள்ளும் சேம்பியன் சிப் கபடி போட்டி நாளை சென்னிமலையில் நடக்கிறது.
சென்னிமலை;
மாநில அளவில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அணி கலந்து கொள்ளும் சேம்பியன் சிப் கபடி போட்டி நாளை (சனிக்கிழமை) சென்னிமலையில் நடக்கிறது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், நீலகிரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம், ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை இணைந்து ராஜீவ் காந்தி கோப்பைக்கான மாநில அளவிலான தமிழ்நாடு துறை சார்ந்த கபடி போட்டியை நடத்துகிறது.
இந்த போட்டி நாளை இரவு 7 மணிக்கு சென்னிமலை அடுத்துள்ள மைலாடி ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் மின் ஒளியில் நடக்கிறது. சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் இரவு மட்டும் நடக்கும்.
இந்த போட்டியில் 9 துறை சார்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. போட்டியினை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலைராஜா தொடங்கி வைக்கிறார். போட்டி தொடக்க விழாவில் மாநில, மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மக்கள் ராஜன் செய்து வருகிறார்.