செய்திகள்
நாகை அருகே கடையில் நகை திருட்டு
நாகை அருகே கடையில் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55), இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று காலையில் அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் நகையை கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
இதுகுறித்து கீவலூர் போலீசில் மனோகரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.