செய்திகள்

வி‌ஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Published On 2016-10-06 16:11 IST   |   Update On 2016-10-06 16:12:00 IST
உடல்நலக்குறைவு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்த மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மறைஞாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மாரிமுத்து (80). தன் மகன் பன்னீர்செல்வத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.

உடல்நலம் மிகவும் மோசமானதால் மனமுடைந்த அவர் வி‌ஷ மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்து விட்டார்.

இது குறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News