செய்திகள்

மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2016-09-19 16:38 IST   |   Update On 2016-09-19 16:38:00 IST
மொடக்குறிச்சி அருகே உரிய அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து உரிமையாளரை மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே முத்துக்கவுண்டன்பாளையம் ரிங்ரோடு வழியாக சிலர் அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து மொடக்குறிச்சி தாசில்தார் கருப்புசாமி, துணை தாசில்தார் புவனேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முத்துக்கவுண்டன்பாளையம் ரிங்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதை அப்போது கரூர் பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சோதனையிட்ட போது உரிய அனுமதியின்றி மணல் எடுத்து வந்ததும், லாரி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News