செய்திகள்
ஆண்டிமடம் அருகே பெண்களை தாக்கிய வாலிபர் கைது
ஆண்டிமடம் அருகே வீட்டின் மீது தையல மரம் விழுந்தது தொடர்பாக பெண்களை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிமடம் அருகே குளத்தூர் கிராமம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அமுதா (வயது 35). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சிவக்குமார் (32). இந்நிலையில் கடந்த 23–ந்தேதி பெய்த மழையில் அமுதாவின் வீட்டின் இருந்த தையல மரம் முறிந்து சிவக்குமாரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அவர் வீட்டின் ஓடுகள் உடைந்து. இதனால் சிவக்குமார் அமுதா வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதைபார்த்த அமுதாவின் உறவினர் தேன்மொழி மற்றும் அமுதாவின் மாமியார் ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், அமுதா, தேன்மொழி ஆகிய 2 பேரையும் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அமுதா, தேன்மொழி ஆகிய 2 பேரையும் கும்பகோணம் தனியார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.