செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பீர்பாட்டில் குத்து
ஜெயங்கொண்டம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பீர்பாட்டில் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து (வயது 30). இவர் ஸ்ரீரங்கத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 19-ம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்தபோது மழை வருவதுபோல் மேகமூட்டமாக இருந்ததால் தனது மோட்டார் சைக்கிள் நனைந்துவிடாமல் இருக்க வீட்டினுள் நிறுத்துவதற்காக தள்ளிய போது பழனி முத்துவின் தம்பி இளவழகன் வண்டியை உள்ளே நிறுத்தக்கூடாது என கூறி திட்டியுள்ளதாக தெரிகிறது. உடன் பழனி முத்து உன்வண்டி மட்டும் நிக்கலாமா என கேட்டுள்ளார். அதற்கு இளவழகன் நான் எங்குவேண்டுமானாலும் நிறுத்துவேன் எனக்கூறி பழனிமுத்துவை பீர்பாட்டிலால் குத்திவிட்டார்,
காயமடைந்த அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.