செய்திகள்
மயிலாடுதுறையில் போலீஸ் சோதனையில் 5 குழந்தை தொழிலாளர் மீட்பு
மயிலாடுதுறையில் போலீசார் அதிரடி சோதனையில் 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
மயிலாடுதுறை:
18 வயதிற்குட்பட்ட காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ‘ஆபரேஷன் உஸ்கான்’ என்ற செயல் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை பகுதியில் நேற்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மயிலாடுதுறை கால்டெக்ஸ், விஜித்திராயர் அக்ரஹாரம், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளில் 5 பேர் குழந்தை தொழிலாளர்களாக வேலைபார்ப்பது தெரியவந்தது. உடனே போலீசார், அந்த 5 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து 5 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த சோதனையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி, கலியமூர்த்தி, போலீஸ் ஏட்டுகள் வசந்தகுமாரி, கயல்விழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரியும் சமூக பணியாளர் ரம்யா ஆகியோர் ஈடுபட்டனர்.