செய்திகள்

2 தொகுதிகளில் தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: திருமாவளவன் பேட்டி

Published On 2016-05-16 10:48 IST   |   Update On 2016-05-16 11:45:00 IST
மீதமுள்ள 2 தொகுதிகளில் தேர்தல் முடிந்த பின்னரே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அரியலூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

2 தொகுதிகளில் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னரே மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி-த.மா.க வெற்றி பெறும்.

அரவக்குறிச்சியில் ரூ.570 கோடி சிக்கிய விவகாரத்தில் அதிகார பலம் கொண்டவர்கள் தவறு செய்திருக்கலாம்.

இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் 40 நிமிடங்கள் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக, அதிமுக கட்சிகள் நேற்று இரவு வரை பணப்பட்டுவாடா செய்துள்ளதாக கூறினார். மேலும், இருகட்சிகளின் வரம்பு மீறிய செயலை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த தவறிவிட்டது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கு முன் தேர்தலை நடத்த வேண்டும்” என்றார். 

Similar News