செய்திகள்

ஜெயங்கொண்டம் பகுதியில் வாக்காளர் சேவை மையங்களில் தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் ஆய்வு

Published On 2016-04-14 20:41 IST   |   Update On 2016-04-14 20:41:00 IST
ஜெயங்கொண்டம் பகுதியில் வாக்காளர் சேவை மையங்களில் தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் ஆய்வு செய்தனர்.
ஜெயங்கொண்டான்:

தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சட்டமன்ற தொகுதிகளில் நடத்திட உத்தரவிட்டு, நிகழ்ச்சிகள் நாள்தோறும் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையத்தால் அரியலூர் மாவட்டத்திற்கென தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதிபான்டே மாவட்ட தேர்தல் அலுவலர் நம் மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜிடன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் உடையார் பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையங்களை ஆய்வு செய்தார்கள்.

இதில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தின் வாயிலாக 921 விண்ணப்பங்களும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மையத்தில் 237 விண்ணப்பங்களும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தின் மூலம் 44 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 1202 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதை பதிவேடுகளைக்கொண்டு ஆய்வு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன், ஜெங்ககொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் இராஜகோபால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கங்கா தரணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Similar News