செய்திகள்

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2016-04-07 17:39 IST   |   Update On 2016-04-07 17:39:00 IST
அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர விற்கிணங்க தேர்தலில் பங்கேற்றல் மற்றும் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு பகுதியாக கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு தேர்தலில் பங்கேற்றல் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன் அவர்கள் கருத்துக் கூறி, வாக்காளர் உறுதிமொழியினை வாசித்தார். அதனை அடுத்து மாணவ, மாணவிகளும் பின் தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்அ.செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News