உள்ளூர் செய்திகள்

ஊட்டி பூங்காக்களில் 2-வது சீசனுக்காக 20 ஆயிரம் அழகு தாவரங்கள் தயார்

Published On 2022-09-18 14:01 IST   |   Update On 2022-09-18 14:02:00 IST
  • நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படும்.
  • ஊட்டி தாவரவியல் பூங்காவில் 260 ரகங்களில் 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

இதனால் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படும். குறிப்பாக கோடைசீசனான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் கண்காட்சிகள் நடத்தப்படும். சுற்றுலா பயணிகள் கண்காட்சியில் இடம்பெறும் பூக்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

ஊட்டியில் 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

2-வது சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 260 ரகங்களில் 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான பணியில் தோட்டக்க லைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரோஜா பூங்காவிலும் மலர்கள் தயார்படுத்தும் பணி நடக்கிறது.

இதுதவிர தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் அலங்கார பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. 2-வது சீசனுக்காக ஊட்டியில் பூங்கா நர்சர்களில் 20 ஆயிரம் அழகு தாவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

Similar News