உள்ளூர் செய்திகள்

வாட்ஸ்-ஆப் மூலம் ரூ.20 லட்சம் மோசடி

Published On 2023-02-25 09:36 GMT   |   Update On 2023-02-25 09:36 GMT
  • பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்படிருந்தது.
  • புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 33).இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

சமீபத்தில் இவரது செல்போனுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் வந்த தகவலில் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்படிருந்தது.

ஆனால் இந்த வேலையை பெறுவதற்கு பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று மகாலட்சுமியிடம் இருந்து சுமார் ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்து 900 வரை வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளனர்.

ஆனால் அதன்பிறகு அந்த வாட்ஸ்-ஆப் எண்ணை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த மென்பொருள் இஞ்சினீயர் கணேஷ் என்பவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி அவரது கணக்கு தொடர்பான தகவல்களை சேகரித்த மர்ம நபர்கள் கணேஷின் வங்கி கணக்கில் இருந்த ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 500 -ஐ அபேஸ் செய்துள்ளனர்.

இதுகுறித்து கணேஷ் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News