உள்ளூர் செய்திகள்

ரெட்டிச்சாவடியில் பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

Published On 2023-02-28 14:30 IST   |   Update On 2023-02-28 14:30:00 IST
  • புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்சினை அய்யனார் ஓட்டி சென்றார்.மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.
  • 2 நபர்கள் வழி விடாமல் ஏன் சென்றாய் என கேள்வி எழுப்பி டிரைவர் அய்யனாரை சராமாறியாக தாக்கினார்கள்.

கடலூர்:

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. பஸ்சினை அய்யனார் ஓட்டி சென்றார். தனசேகர் கண்டக்டர் பணிபுரிகிறார். தனியார் பஸ் சென்று கொண்டிருந்தபோது ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டு பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர் .பின்னர் 2 நபர்கள் வழி விடாமல் ஏன் சென்றாய் என கேள்வி எழுப்பி டிரைவர் அய்யனாரை சராமாறியாக தாக்கினார்கள். மேலும் இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் பஸ்சுடன் சேர்த்து கொளுத்தி விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த டிரைவர் அய்யனார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரெட்டிச்சாவடி நிலையத்தில் கண்டக்டர் தனசேகர் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி அரியாங்குப்பம் அரவிந்தராஜ் (வயது 23), நோனாங்குப்பம் நீலப்பிரியன் (18) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News