வெவ்வேறு இடங்களில் குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட நந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகேயுள்ள உழசந்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனவைி நந்தினி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியுள்ள நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள காளிகுட்டு பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ். இவரது மனைவி மல்லிகா (32). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மல்லிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.