உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே 1 1/2 டன் இரும்பு பொருட்கள் கடத்தி சென்ற 2 பேர் கைது
- கடலூர் அருகே 1 1/2 டன் இரும்பு பொருட்கள் கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- டிரைவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் சாலக்கரை அருகே சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது 1 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தன. இதனை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு டிரைவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இரும்பு பொருட்கள் வாகனம் மற்றும் இரண்டு பேரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் தியாகவல்லி சேர்ந்த மூர்த்தி (வயது 22), பிரபாகரன் (வயது 33) ஆகிய இரண்டு பேரும் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.