உள்ளூர் செய்திகள்
உடும்பு வைத்திருந்த 2 பேர் கைது
- தெடாவூர் சொக்கனூர் பகுதியில் நேற்று வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர்.
- அதில் உடும்பு இருந்தது தெரிய வந்தது. உடனே வனத்துறையினர் உடும்பு வைத்திருந்த இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் சொக்கனூர் பகுதியில் நேற்று வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். வனப்பகுதியில் நடந்து வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். அதில் உடும்பு இருந்தது தெரிய வந்தது. உடனே வனத்துறையினர் உடும்பு வைத்திருந்த ஆனையம்பட்டியை சேர்ந்த பரமசிவம் (வயது 26), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மூர்த்தி (19) ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.