உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்

Update: 2022-10-07 05:45 GMT
  • தேனி அருகே நர்ஸ் உள்பட 2 பேர் மாயமாகினர்.
  • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே டொம்பு ச்சேரி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் காளியப்பன் மகன் ஜெகதீசன் (வயது19). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய அவர் சம்பவத்தன்று ேபாடி செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவனை தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்பாறையை சேர்ந்தவர் வனராஜ் மகள் ஜெயப்பிரியா (20). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு கம்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

தினமும் தனது தந்தைக்கு செல்போனில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் அணைத்து வைக்க ப்பட்டிருந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று வனராஜ் விசாரித்தார். அப்போது ஜெயப்பிரியா கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றார் என தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வனராஜ் நண்ப ர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News