உள்ளூர் செய்திகள்
மின்வயர்களை திருடிய 2 பேர் கைது
- தென்னந்தோப்பில் இரவு நேரத்தில் மின் மோட்டார் அறையில் இருந்துபோர்வெல் பம்ப்செட் மோட்டாருக்கு செல்லும் மின்வயர்களை திருடி உள்ளனர்.
- அப்பகுதி மக்கள் கையும் களவுமாக மின் வயர்களுடன் பிடித்து பேராவூரணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (20). இவர்கள் இருவரும் குருவிக்கரம்பை அருகே உள்ள முனுமா க்காடு கிராமத்தில் தனியா ருக்கு சொந்தமான தென்ன ந்தோப்பில் இரவு நேரத்தில் மின் மோட்டார் அறையில் இருந்துபோர்வெல் பம்ப்செட் மோட்டாருக்கு செல்லும் மின்வயர்களை திருடி உள்ளனர்.
இவர்களை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக மின் வயர்களுடன் பிடித்து பேராவூரணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குபதிவு செய்து மூர்த்தி, அஸ்வின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.