உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது- கையும் களவுமாக பிடித்த வனத்துறையினர்

Published On 2022-08-22 18:05 IST   |   Update On 2022-08-22 18:05:00 IST
  • வனவிலங்குகளை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும் போது வனஊழியர்கள் சுற்றி வளைத்தனர்
  • வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த பன்னூர் காப்பு காடு செட்டிபுண்ணியம் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் காட்டு பகுதியில் விலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக ரகசிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து வனசரகர் கமல் ஆசன்னா தலைமையில் வன ஊழியர்கள் வனப்பகுதியில் பதுங்கி இருந்தனர்.

அப்போது வனவிலங்குகளை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும்போது வன ஊழியர்கள், மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் வேட்டையாடிய காட்டுப்பன்றி, காட்டு பூனை மற்றும் காட்டு முயல் ஆகியவை இறந்த நிலையில் வைத்திருந்தனர். அனைத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் (34), மற்றொருவர் செங்கல்பட்டை சேர்ந்த ரவி மகன் கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் மீது  வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு இரண்டாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News