உள்ளூர் செய்திகள்
நெல்லையில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது
- தெற்கு பாலபாக்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 10-ந் தேதி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
- தமிழ்வாணன், மணிகண்டன் என்ற ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 10-ந் தேதி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து லட்சுமணன் (வயது 69) என்பவர் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வாதிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியது மூன்றடைப்பை சேர்ந்த தமிழ்வாணன் (29) மற்றும் வல்லநாட்டை சேர்ந்த மணிகண்டன் என்ற ராஜேஷ் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.