உள்ளூர் செய்திகள்

வள்ளியூரில் இருந்து 17சி அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டும் - பா.ஜனதா கோரிக்கை

Published On 2023-07-26 14:29 IST   |   Update On 2023-07-26 14:29:00 IST
  • பல நாட்கள் காலை நேரங்களில் கூத்தன்குழி கிராமத்திற்கு செல்லாமல் கூடங்குளத்திலேயே திரும்பி வந்து விடுகிறது.
  • குறிப்பாக மாலை 6.40-க்கு ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வேண்டிய பஸ் 6.15 மணிக்கும், இரவில் ராதாபுரத்தில் இருந்து 8.20 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 7.45-க்கும் இயக்கப்பட்டு வருகிறது.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பணிமனையில் இருந்து கூத்தன்குழி கிராமத்திற்கு கும்பிளம்பாடு, ராதாபுரம், கூடங்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம் வழியாக 17சி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலையில் கூத்தன்குழி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆனால் பல நாட்கள் காலை நேரங்களில் கூத்தன்குழி கிராமத்திற்கு செல்லாமல் கூடங்குளத்திலேயே திரும்பி வந்து விடுகிறது. சில நாட்கள் ராதாபுரத்திலேயே திரும்பி விடுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மட்டும் இயக்கப்படுகிறது.

குறிப்பாக மாலை 6.40-க்கு ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வேண்டிய பஸ் 6.15 மணிக்கும், இரவில் ராதாபுரத்தில் இருந்து 8.20 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 7.45-க்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வள்ளியூர் செல்ல 1 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே 17சி பஸ்சை முறையாக இயக்க வள்ளியூர் பணிமனை கிளை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News