உள்ளூர் செய்திகள்

நெல்லையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கமிஷனர் ராஜேந்திரன் பொது மக்களிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். அருகில் துணை கமிஷனர்கள் சரவண குமார், சீனிவாசன், அனிதா உள்ளனர்.

நெல்லை மாநகர பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேரின் 'லைசென்ஸ்' ரத்து- போலீஸ் கமிஷனர் பரிந்துரை

Published On 2023-02-15 09:31 GMT   |   Update On 2023-02-15 09:33 GMT
  • நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • விதிமுறைகளை மீறிய 563 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன் அந்த வாகன ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்து வருகிறார்.

இதுதொடர்பாக கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உரிமம் ரத்து

கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், அதிக அளவில் சரக்குகள் ஏற்றிச்செல்லுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தேன். அதன்பேரில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News