உள்ளூர் செய்திகள்

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலையை படத்தில் காணலாம்.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 150 மீட்டர் சாலை- பல கிலோ மீட்டர் சுற்றி செல்வதாக பொதுமக்கள் புகார்

Published On 2023-12-21 06:37 GMT   |   Update On 2023-12-21 06:37 GMT
  • தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
  • அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாராபுரம் கிராமத்தில், காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சுமார் 150 மீட்டர் சாலை முற்றிலும் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்வதற்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதாகவும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத மோசமான சூழ்நிலை இருப்பதால் தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, காட்டாற்று வெள்ளத்தினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகியும் தற்போது வரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரச மருத்துவத் தேவைக்குக்கூட தூத்துக்குடி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் முத்துக்குமாரபுரம் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News