ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகலாபம் தருவதாக ஆத்தூர் பட்டதாரி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி
- தாமோதரன் ஆன்லைனில் 22 முறை ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 399 முதலீடு செய்தார்.
- புகாரின் பேரில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 29). பட்டதாரி. இவரது செல்போனுக்கு பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பிய தாமோதரன் ஆன்லைனில் 22 முறை ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 399 முதலீடு செய்தார். அதற்கான கமிஷன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 310 பெற்றார். தாமோதரன் அந்த ஆன்லைன் மூலம் மீதி தொகையை திரும்ப பெற முயன்றார். ஆனால் அவரால் ரூ. 14 லட்சத்தை திரும்ப பெற முடியவில்லை.
அப்போதுதான் தாமோதரன் அந்த வெப்சைட் போலி என்பதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் தாமோதரன் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் விசாரணை நடத்தி வருகிறார்.