உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் 

சென்னை விமான நிலையத்தில் கோகேன் போதைப் பொருள் பறிமுதல்- பெண் பயணி கைது

Update: 2022-08-10 18:21 GMT
  • 1,218 கிலோ கோகேன் போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
  • போதைப் பொருள் கடத்திய பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை.

போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த ப்ரான்சிஸ் ஜோரெல் டோரஸ் என்ற பெண் பயணியிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, அவரது கைப்பையில், 11.75 கோடி ரூபாய் மதிப்பிலான 1.218 கிலோ எடையுள்ள கோகேன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.ஆர். உதய்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News