உள்ளூர் செய்திகள்

மண்ணில் புதைக்கப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

1180 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2023-10-10 09:16 GMT   |   Update On 2023-10-10 09:16 GMT
  • கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
  • 2 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:

புதுச்சேரி மாநிலம் காரை க்காலில் இருந்து நாக ப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து மதுக் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்தாலும் கடத்தல்கா ரார்களும் பல்வேறு நூதன முறையில் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

நாகை நல்லியான் தோட்டம், வடக்குபொய்கை நல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டி ல்களை மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மறைத்து வைத்திருந்திருந்த 1180 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்பட்ட 6 மூதாட்டி உள்பட 9 போலீ சாரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கடத்தி லுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டி ல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

வெளி மாநில மதுபாட்டி ல்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடர் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படு பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.

Tags:    

Similar News