உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்றவர்களை படத்தில் காணலாம்.

3 குழந்தைகள் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயற்சிதர்ணாவிலும் ஈடுபட்டதால் பரபரப்பு

Published On 2023-04-06 09:04 GMT   |   Update On 2023-04-06 09:04 GMT
  • செல்லதுரை என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
  • செல்லதுரையின் சித்தப்பா மகன் பொன்னையன் என்கின்ற துரைசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், சின்னவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

சேலம்:

சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்த பூமாலை மகன் சின்னவர். இவர் செல்லதுரை என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஓமலூரில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

கும்பல் தாக்குதல்

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி, எஸ்.எம்.சி. காலனிக்கு வந்த சின்னவர், அன்றிரவு உணவு வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது, செல்லதுரையின் சித்தப்பா மகன் பொன்னையன் என்கின்ற துரைசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், சின்னவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த சின்னவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ஒரு சிலரை கைது செய்தனர்.

10 பேர் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில், பூமாலையின் 3-வது மகன் மணி என்பவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மணி எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியாத நிலையில், மணியின் தாய், அவரது மருமகள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்னையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த னர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தர்ணா

ஆனாலும் அவர்கள் கேட்காமல், கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி, சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து மணியின் தாய் கூறும்போது, எனது 2-வது மகனை, செல்லத்துரை ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கியதில் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் எனது 3-வது மகனை எந்த காரணமும் இல்லாமல் கைது செய்து வைத்துள்ள னர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.

3 குழந்தைகள் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News