உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலில் பயன்படுத்தப்பட்ட மினி லாரியை படத்தில் காணலாம்.

திட்டக்குடியில் வாகன சோதனையில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்:தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு

Published On 2023-09-14 08:20 GMT   |   Update On 2023-09-14 08:20 GMT
  • போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார்.
  • கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரவு திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமை யிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக விருத்தாசல த்திலிருந்து தொழுதூர் நோக்கி மினி லாரி ஒன்று வந்தது. அந்த மினி லாரியை மடக்கிய போலீசார் அந்த லாரியை சோதனை செய்ய டிரைவரிடம் லாரியின் பின்பக்க கதவை திறக்க உத்தரவிட்டார். உடனே மினி லாரி டிரைவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த போலீசார் டிரைவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பார்த்தபோது லாரியில் மூட்டை மூட்டைாயக ரேஷன் அரிசி இருந்தது. சுமார் 50 கிலோ எடை கொண்ட 25 ரேஷன் அரிசி மூட்டைகளிலிருந்த 1.5டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி திட்டக்குடி போலீசார் கடலூர் உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உணவு பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று காலை கடலூரில் இருந்து திட்டக்குடிக்கு சென்றனர் . அவர்களிடம் திட்டக்குடி போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை ஒப்படைத்தனர். இதனையடுத்து உணவு பொருள் கடத்தல் பிரிவினர் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்து போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News