உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பேசிய காட்சி.

நெல்லை கிழக்கு மாவட்டத்தில் ஜூன் 3-ந்தேதிக்குள் 1½ லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் - தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-03-28 14:34 IST   |   Update On 2023-03-28 14:34:00 IST
  • கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார்.
  • வள்ளியூரில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரையாற்ற உள்ள பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகாராஜ நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார்.

உறுப்பினர்கள் சேர்க்கை

இதில் தொகுதி பொறுப்பாளர்கள் சிவராஜ்(அம்பை), ஜோசப் ஸ்டாலின்(நாங்குநேரி), தாமரை பாரதி(ராதாபுரம்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வருகிற 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதிக்குள் தொகுதிக்கு 50 ஆயிரம் பேர் வீதம் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 1½ லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 2024 மக்களவை தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பங்கேற்றவர்கள்

வருகிற 31-ந்தேதி வள்ளியூரில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சிறப்புரையாற்ற உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் திரளான நிர்வாகிகள் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.பிரபாகரன், கே.கே.சி. பிரபாகரன், சித்திக், கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, வக்கீல் அணி செல்வசூடாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News