உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன்கடை விற்பனையாளர் பணிக்கான நேர்காணல்

Published On 2022-12-16 15:39 IST   |   Update On 2022-12-16 15:39:00 IST
  • 146 விற்பனையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபடுகிறது.
  • முதல் நாள் நேர்காணலில், 471 பேர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 146 விற்பனையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபடுகிறது. இப்பணிக்கு விண்ணப் பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தொடங்கப்பட்டுள்ள நேர்காணல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8,482 பேர் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் நாளொன்றுக்கு, 700 பேர் வீதம் நேர்காணல் நடத்தப்படும்.

முதல் நாள் நேர்காணலில், 471 பேர் கலந்து கொண்டனர். 229 பேர் கலந்து கொள்ளவில்லை என்றார். கூட்டுறவுதுறையை சேர்ந்த அலுவலர்கள் நேர்காணலை நடத்தினார்கள்.

Similar News