செய்திகள்
தி.மு.க தலைவர் கருணாநிதியுடன்-ரஜினி சந்திப்பு
திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1-ந் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் உடல்நிலை சீரடைந்து வந்தது.
ஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை பூரண நலம் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அவர் இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து இருவரும் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.