செய்திகள்
மாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை விவரங்கள்
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனையில் காரின் மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளது. #Maruti
மாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் சார்ந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய செடான் மாடல் ஆகஸ்டு 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
நெக்சா விற்பனையகங்களில் புதிய சியாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன, அதன்படி பயனர்கள் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை செலுத்தி புதிய செடான் மாடலை முன்பதிவு செய்யலாம். இத்துடன் புதிய கார் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி புதிய சியாஸ் மாடல் மேக்னம் கிரே நிறத்தில் கிடைக்கும் என்றும் மெஷின் ஃபினிஷ் செய்யப்பட்ட 16-இன்ச் அலாய் வீல்கள் ஆல்ஃபா வேரியன்ட்-லும், டெல்டா மாடலில் 15-இன்ச் வீல்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய சியாஸ் மாடல்: சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், ஆட்டோ டிமமிங் IRVM வசிதகளும், ஸ்டீரிங் வீலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அனைத்து வேரியன்ட்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையாகும் சியாஸ் டீசல் மாடலில் உள்ளதை போன்ற SHVS ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த SHVS சிஸ்டம் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டரை பயன்படுத்துகிறது. #Maruti #automobile