வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Published On 2025-09-23 09:29 IST   |   Update On 2025-09-23 09:29:00 IST
  • தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-ம், சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 149 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

22-09-2025- ஒரு கிராம் ரூ.148

21-09-2025- ஒரு கிராம் ரூ.145

20-09-2025- ஒரு கிராம் ரூ.145

19-09-2025- ஒரு கிராம் ரூ.143

18-09-2025- ஒரு கிராம் ரூ.141

Tags:    

Similar News