வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

Published On 2025-11-06 16:43 IST   |   Update On 2025-11-06 16:43:00 IST
  • கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து.
  • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு நேற்று ரூ.560 குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ11 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது.

அதேபோல், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.11,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலையில், கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 164 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, வெள்ளியின் விலை மாலையில் கிராமுக்கு மேலும் ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News