வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை- மக்கள் அதிர்ச்சி

Published On 2025-11-13 09:38 IST   |   Update On 2025-11-13 09:38:00 IST
  • நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
  • வெள்ளி விலையும் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னை:

தங்கம் விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் சற்று சரிவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வாரம் இறுதி வரை விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. 10, 11-ந்தேதிகளில் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்தை மீண்டும் தாண்டியிருந்த நிலையில், நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஒன்பதாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600

10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840

09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

12-11-2025- ஒரு கிராம் ரூ.173

11-11-2025- ஒரு கிராம் ரூ.170

10-11-2025- ஒரு கிராம் ரூ.169

09-11-2025- ஒரு கிராம் ரூ.165

08-11-2025- ஒரு கிராம் ரூ.165

Tags:    

Similar News