செய்திகள்
புகைப்படம் நன்றி: TeamBHP

ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஸ்பை விவரங்கள்

Published On 2018-09-16 11:29 GMT   |   Update On 2018-09-16 11:29 GMT
ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. சமீபத்தில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. #jeepcompass



இந்தியாவில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகமான சில தினங்களில் ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

வரும் வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் பெயருக்கு ஏற்றார் போல் ஏற்கனவே விற்பனையாகும் ஓ வேரியன்ட்டை தழுவி உருவாக்கப்படுகிறது. இதன் விலை ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜீப் காம்பஸ் மாடல் டூயல்-டோன் நிறங்களில் புதிய ஸ்போர்ட் தோற்றத்துடன் உருவாகியுள்ளது. இதன் சக்கரங்களிலும் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய ஸ்பை படங்களின் படி இந்த எஸ்.யு.வி. மாடலில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பானரோமிக் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.


புகைப்படம் நன்றி: TeamBHP

இத்துடன் ஓட்டுனர் மற்றும் முன்பக்க இருக்கைகளை பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் ஜீப் காம்பஸ் ஓ வேரியன்ட்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் மாடலிலும் பெட்ரோல் ஆட்டோ அல்லது டீசல் மேனுவல் (2wd அல்லது 4wd) ஆப்ஷனுடன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 171 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.

பெட்ரோல் வேரியன்ட்டில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 160 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இரண்டும் டாப்-என்ட் வேரின்ட் என்பதால் டீசல் வேரியன்ட்டில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், பெட்ரோல் வேரியன்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News