செய்திகள்

ஆனந்த் மஹிந்திராவுக்கு அட்வைஸ் சொன்ன சிறுமி

Published On 2019-04-08 04:54 GMT   |   Update On 2019-04-08 04:54 GMT
இந்திய மக்கள் பயணங்களில் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆனந்த் மஹிந்திராவுக்கு 11 வயது சிறுமி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். #AnandMahindra
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா 11 வயது சிறுமிக்கு ட்விட்டரில் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில் 11 வயது சிறுமி தனக்கு எழுதியிருந்த கடிதத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

இந்திய சாலைகளில் பயணிக்கும் போது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய மிக எளிய வழிமுறையை மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்திருக்கிறார். சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஹாரன் எழுப்பப்படும் போது பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருப்போம்.



இதற்கு தீர்வு காண 11 வயதான மஹிகா மிஸ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு கோரிக்கையாக வைத்திருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் தேவையற்ற நிலைகளில் ஹாரன் எழுப்புவதை தடுக்கும் நோக்கில், பத்து நிமிடங்களில் ஐந்து முறை மட்டும் ஹாரன் வேலை செய்யும் படி மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இத்துடன் ஹாரன் ஒலிக்கும் நேரம் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இதுபோன்று மாறும் போது ஹாரன் மூலம் ஏற்படும் ஒலி மாசு பெருமளவு குறைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.


சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra

Tags:    

Similar News