செய்திகள்
கேஎஸ் அழகிரி

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- எத்தனை தொகுதிகள் என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்: கேஎஸ் அழகிரி

Published On 2021-03-03 09:49 GMT   |   Update On 2021-03-03 09:49 GMT
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கடலூர்:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா இந்தியாவில் தவறான ஆட்சியை நடத்துகிறது. அதையும் அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்ப்பதுதான் எங்கள் நிலை.

தவறான கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். ஒத்த கருத்துள்ள கட்சிகள் இந்த கூட்டணியில் இருக்கின்றன. நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.

சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி கட்சிகள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கிறார்கள்.

சுருக்கமாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கருத்தை ஆலோசித்து வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி வழங்க வேண்டும் என்பதை தி.மு.க. முடிவு செய்யும். கூட்டணி கட்சிகளை நட்புடன் நாங்கள் அணுகுகிறோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ராகுல்காந்தி வருகையின் போது மக்கள் அளித்த ஆதரவே இதற்கு சாட்சி.

அவரை காணவந்த பெரும் கூட்டமே காங்கிரஸ் செல்வாக்கு குறையவில்லை என்பதை காட்டுகிறது. கட்சி சார்பில் ஒரு காசுகூட செலவு செய்யாமல் இந்த கூட்டம் கூடியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News